|
அறியாமையே அனைத்து கஷ்டங்களுக்கும் காரணம்.
|
இயலாமை பென்சனும், விசேஷ குடும்ப பென்சனும்.
(Grant of Special Family Pension after the death of Disability pensioner PCDA Circular No.440 dt.26.8.2010)
ஒரு படை வீரர் பணியின் நிமித்தம் இயலாமை அடையும்போது, மருத்துவ குழுவின் சிபாரிசின்பேரில் அவருக்கு இயலாமை பென்சன் (Disability/Invalid Pension) வழங்கப்படுகிறது.
இவருடைய மீதி வாழ் நாளை நிர்ணயிப்பது, இவருடைய இயலாமை தன்மையைப்பொறுத்து அமைகிறது. சில உயிர் கொல்லி நோய்களினால் பாதிக்கபட்டு இயலாமை பென்சன் பெற்று வருபவர்கள் நீண்ட நாள் வாழ வாய்ப்பில்லை என்பது மருத்துவ உலகத்துக்கு ந்ன்கு தெரியும். ஆனால் பாதிக்கபட்டவர்களும் அவருடைய குடும்பதினரும் இதுபற்றி ந்ன்கு தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
காரணம் எந்த நோய் நொடியினால் பாதிக்கபட்டு, இயலாமை பென்சன் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதோ அதே நோயினால் அவர் பென்சனில் வந்த ஏழு ஆண்டுக்ளுக்குள் இறக்க நேர்ந்தால் அவர் மனைவிக்கு விசேஷ குடும்ப பென்சன் (Special Family Pension) வாழ்நாள் முழுவதும் வழங்கப்படவேண்டும் என்ற பென்சன் விதிமுறைகள் உள்ளது.
விசேஷ குடும்ப பென்சன் (Special Family Pension) என்பது சாதரண குடும்ப பென்சனைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். ஆறாவது ஊதிய கமிஷன்படி குறைந்தபட்ச சாதாரனண குடும்ப பென்சன் Rs.3500 எனவும், குறைந்தபட்ச விசேஷ குடும்ப பென்சன் (Minimum Special Family Pension) Rs.7000/-எனவும் 01.01.2006 முதல் நிர்ண்யிக்கபட்டுள்ளது.
ஒரு படைவீரன் பணியின் நிமித்தம் ஏற்பட்ட இயலாமைக்காக அவருக்கு இயலாமை பென்சன் வழங்குவ்தும், அந்த இயலாமையால் குறைந்த வயதில் அகால மரணமடைந்த்தற்காக அவர் மனைவிக்கு விசேஷ குடும்ப பென்சன் வழங்குவதென்பதும் நியாமான இயற்கை விதிகளோடு இணைந்த நீதியாகும்.
ஆனால் இத்தனை தெளிவாக உள்ள இந்த இயற்கை நீதியை (Natural Justice) பெறுவது அத்தனை எளிதல்ல என்பதை பாதிக்கபட்டவர்கள் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இறப்பு என்பதை எல்லோரும் ஒருநாள் சந்தித்தே ஆகவேண்டும். அதற்காக யாரும் எதுவும் செய்யாமல் சிவனே என்றிருப்பதில்லை. ஆனால் இதுபோன்ற ஆட்கொல்லி நோயால் பாதிக்க பட்டவர்கள், தனக்குப்பின் தன் மனைவி, மக்கள் பொருளாதார சிக்கல் இல்லாமல் இருப்பதற்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை தன்னைபற்றி நன்கு அறிந்த உற்றார் உறவினர்களிடம் விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.
மேற்குறித்த அரசாணையின்படி, ஒரு இயலாமை பென்சன் பெறுபவர் பணி விலகி வந்த 7 ஆண்டுகளுக்குள் மரணமடைந்து விட்டால் அவர் மனைவிக்கு விசேஷ குடும்ப பென்சன் கிடைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.
1. முதலில் எந்த இயலாமைக்கு, அவருக்கு இயலாமை பென்சன் வழங்கபடுகிறதோ, அதே இயலாமை காரணமாகத்தான் அவர் இறந்தார் என்பதை மருத்துவ சான்றிதழ்களுடன் நிரூபிக்கவேண்டும்.
2. மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழில், நோயின் அறிகுறிகள், நோயின் தன்மை, சிகிச்சை அளித்த நாட்கள், இறந்த தேதி முதலியவை குறிப்பிடபடவேண்டும்.
3. இறப்பிற்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படவேண்டும். (Cause of Death)
4. பென்சன் விண்ணப்பம் அனுப்புபவர் இரண்டு சாட்சியங்களுடன் முழு விபரமும் இனணைக்க வேண்டும்.
5. தேவைப்பட்டால் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட், போலீஸ் விசாரணை தகவல் ஆகியவையும் இணைக்கப்படவேண்டும்.
இறந்த படைவீர்ருடைய ரிகார்டு ஆபிசுக்கு அனுப்ப படும் இந்த விண்ணப்பத்துடன் மற்ற மருத்துவ ஆவணங்களும் சேர்க்க்ப்பட்டு அந்த விதவைக்கு விசேஷ குடும்ப பென்சன் வழங்க பரிந்துரைக்க்கப்படும்.
ஒருவேளை நன்கு தெரிந்த, புரிந்த விதிகளின்படி விசேஷ குடும்ப பென்ஷனுக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்ணப்பம் சரியான காரணம் காட்டப்படாமல் நிராகரிக்கப்பட்டால் சம்பந்தபட்டவர்கள் மனம் தளராமல் நீதிக்காக் போராடவேண்டும். இதுசம்பந்தமான நிபுணர்களை உடனே சந்தித்து, ஆலோசனை பெற்று தேவைப்பட்டால் நீதி மன்றம் செல்லவும் தயங்க கூடாது.
தற்போது ராணுவ தீர்ப்பாயங்கள் (Armed Forces Tribunal) நாடெங்கிலும் செயல்படுவதால், உங்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்புகள் உண்டு. நீதிக்காகவும், நியாதிற்காகவும் போராட தயங்க கூடாது. துன்பத்திலும் ஒரு இன்பம் (Blessing in disguise) என்பதுபோல் ராணுவ தீர்ப்பாயங்களின் செயல்பாடுகள், பாதிக்கபட்ட பலராணுவ வீரர்களுக்கு ஒரு வரப்ப்ரசாதமாக அமைந்துள்ளது.
ராணுவ தீர்ப்பாயத்தின் சென்னை கிளை முகவரி.
Armed Forces Tribunal,
1A, (Old MH Complex) Rudhra Road,
St.Thomas Mount, Chennai-16. Phone:044-2233203
“வீரத்துடன் வாழ்வதைவிட விழிப்புடன் வாழ்வதே சிறந்தது”
பின் குறிப்பு: இந்த கட்டுரை CDA Circular No.440 dt.26.8.2010 யின் முக்கிய நோக்கத்தை எல்லோரும் புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டுள்ளது. தெரிந்து கொண்டால்தான் பயன் பெறலாம்.
எனக்கு தெரியாது என்று சொன்னால் ஒன்றும் செய்யமுடியாது. எனவே விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
“தெரிந்து கொள்ளுங்கள்” என்ற எமது புத்தகத்தை அனைவரும் படிக்கவும்.
இதை எல்லா கேன்டீன்களிலும், ECHS கிளினிக்குகளிலும் அச்சிட்டு ஒட்டவும். உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்.
No comments:
Post a Comment