குடி பழக்கம் நம் குலத்தை கெடுக்கும்
நடிப்புக்கு கூட குடிப்பதை தடை செய்யும் இந்த அரசு
நல்ல குண முடய முன்னாள் படை வீரர்களுக்கும்
விதவைகளுக்கும் மதுபானம் வழங்குவது ஏன் ?
யார் கேட்டார்கள் இவர்களிடம் இந்த நச்சு பானத்தை ?
இந்த அரசின் கொள்கை தான் என்ன ?
இந்த முன்னாள் படை வீரன் அரசிடம்
எதுவும் கேட்ககுடாது
எப்போதும் குடும்பத்துடன் குடி போதையில் மிதக்க வேண்டும் என்பதற்காகவா ?
சிந்தியுங்கள் தோழர்களே ! சிந்தியுங்கள் !
நம்மை முட்டாள் ஆக்குதிறது இந்த அரசு
நியாயமான் பென்ஷன் வழங்க மறுக்கும் இந்த அரசு
நச்சு தண்ணீரை மட்டும் வழங்குவது ஏன் <
நம் சிந்தனை மங்க வேண்டும்
நம் குலம் சீர் குலைந்து போகவேண்டும்
என்பது மட்டுமே இந்த அரசின் நோக்கம்
இல்லைஎன்றல் நிறுத்தட்டும் உடனே
இந்த நச்சு பானத்தை
வழங்கட்டும் நியாயமான
பென்சனை உடனே எங்களுக்கு
மது பானத்தை கொடுத்து மயக்க நினைக்காதே
எங்களை ஏமாற்றியது போதும் எங்களை இத்தனை நாளும்
எங்கள் கோரிக்கை ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்
முன்னால் வந்தவனுக்கு அரை பென்ஷன்
பின்னால் வந்தவனுக்கு முழு பென்ஷன்
முன்னுக்கு பின் ஏன் இந்த முரண் பாடு ?
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை ஏன் மறந்தாய் ?
உனக்கு இராணுவம் வேண்டும் என்றால்
ஒழுங்கான பென்ஷன் கொடு எங்களுக்கு
அல்லது எல்லைகளை திறந்துவிடு
உனக்கு காவல் எதற்கு ?
எவனும் வந்து ஆட்சி செய்யட்டும் இந்த நாட்டை.
நாங்கள் அனைவரும் இந்த நச்சு பானத்தை
ஒட்டுமொத்த மாக ஒதுக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை
சாது மிரண்டால் காடு கொள்ளாது
நாங்கள் மிரண்டால் நாடு தாங்காது
நாங்கள் கேட்பது நியாயமான பென்ஷன்
வழங்கிடு உடனே வழங்கிடு உடனே .
3 comments:
Dear Sir,
Your poem on the evils of drinking is very nice.
It is a fact that the govt. is trying to cheat
us by issuing liquor to the widows even instead they can issue 10 kgs of rice or atta.
A day will come we all break the bottles in front of the canteen one day.
Dear Veteran,
Your blog ha been very educative and your analysis on the pensionary benefits to PBORs and family pensioners on the VIth pay commission has been instruemental in creating a very knowledgeable ESM base.Keep up the good
work.
the poem is good. why cant we just boycot on taking liquor from canteen. How many of us sell the liquor for few hundred rupees. we sell our honesty for this amount. Let us take a pledge not to consume liquor or sell it to some one. Then we can keep our head and chest high and say loudly that we are honest soldiers and citizens.
Post a Comment