|
Pensioners waiting outside a bank |
OPERATION OF BANK ACCOUNTS BY OLD/SICK/INCAPACITATED
CUSTOMERS
Letter No.F.No.42/23/2011-P&PW(G) Dated:05.082011.
Sub:Operation of Bank Accounts by old/sick/incapacitated
customers.
Sir,
I am directed to refer to NCCPA letter No.FV-3(P)/11 dated 26.2.2011
on the subject mentioned above and to say that CPAO has examined the matter and
they have informed that opening an account and withdrawal of pension by
old/sick/incapacitated and handicapped pensioner, a provision has already been
provided in Para 18 of the scheme for payment of pensions to Central Government
Civil Pensioners by Authorised Banks (IV Edition, 3rd December,
2004). In this regard, a copy of the
CPAO letter No.CPAO/Tech/Grievances/2008-09 dated 22.12.2008 along with its
enclosure is enclosed herewith for your perusal.
S.R.Kakkar
Under Secretary
Ministry of
Personnel, Public Grievances & Pensions.
Department of
Pensions & Pensioners’ Welfare.
OPENING OF BANK ACCOUNT AND FACILITY FOR WITHDRAWAL OF
PENSION TO SICK AND PHYSICALLY HANDICAPPED PENSIONERS.
The following provision will apply for opening the Bank
Account and withdrawal of pension by old, sick, incapacitated and handicapped
pensioners.
1. Opening
the Account: In case of a pensioner who has lost both his hand and therefore
cannot sign, his signature can be obtained by means of mark. This mark can be
placed by the persons in any manner. It
could be the toe impression. It can be
by means of mark which anybody can put on pensioner’s behalf, the mark being
put by an instrument which has had a physical contact with the person who has
to sign.
2. Withdrawal
of money from the account:
The following method will be adopted in case of sick,
incapacitated handicapped pensioners.
(a) Pensioner who is too ill to sign a Cheque and cannot
be physically present in the bank to withdraw money from his account, but can
put his thumb/toe impression on the Cheque/withdrawal form. In thi case, the thumb or toe impression
should be identified by two independent witnesses known to the bank one of whom
should be responsible bank official.
(b) Pensioner who is not only unable to be physically
present in the bank, but is also not even able to put his thumb/toe impression
on the Cheque/withdrawal form due to certain physical defect/incapacity. In this case a mark can be obtained on the
cheque/withdrawal form in the same manner as described in sub-para (1)
above. That mark should be identified by
two independent witnesses on of whom should be a responsible bank official.
(c) In both the cases mentioned above, the pensioners
might also be asked to indicate to the bank as to who would withdraw pension amount
from the bank on the basis of cheque/withdrawal form as obtained above and that
person should be identified by two independent witnesses. The person who is actually drawing the money
from the bank should be asked to furnish his signatures to the bank.
நீண்ட நாள் நோயுற்றிப்பவர்கள், மிகவும் வயது முதிர்ந்தவர்கள் வங்கியில்
பென்சன் எடுக்கும் வழிமுறைகள்.
வயது முதிர்ந்தவர்களும், வங்கிக்கு நேரடியாக
செல்லமுடியாமல் வீட்டிலோ அல்லது மருத்துவ மனையிலோ நீண்ட நாட்களாக படுக்கையில்
இருப்பவர்களும் வங்கிகளில் பென்சன் எடுக்க முடியாமல் மிகவும் கஷ்டபடுகின்றனர்.
கிராமங்களில் சிலர் இந்த முதியவர்களை வாடகை கார்களில்
வங்கிக்கு அழைத்து செல்ல ஒவ்வொரு மாதமும் ரூபாய் 500 முதல் ரூபாய் 1000 வரை செலவு செய்கின்றனர். சரியான வழிமுறைகள் தெரியாததாலும், இளம் வங்கி
அதிகாரிகள் இவர்களுடைய கஷ்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதாலும் அரசின் நல்ல பல
அரசாணைகள் இருந்தும் இவர்கள் இப்படி ஆல்லல் படுகின்றனர்.
இந்த பென்சனர்களின் உறவினர்கள் பல நூறு ரூபாய் செலவு செய்து
வாடகை கார்களில் இவர்களை அழைத்து வந்து வங்கி முன் நிறுத்தி, வங்கி அதிகாரிகள் நேரில் பார்த்து
கைரேகை வாங்குவதற்கு பலமணிநேரம் காத்திருக்கிறார்கள். (வங்கி செலவிலேயே, வங்கி அதிகாரிகள் இதுபோன்ற
முதியோர்களின் வீடு சென்று நேரில் பார்த்து பென்ஷனை வழங்கலாம் என பல அரசாணைகள்
இருந்தும் நடைமுரைபடுத்தாமல் முதியோர்களை அல்லல் படுத்துகின்றனர்.) இந்த நிலை என்றுதான் மாறுமோ ? வெறும் அரசாணைகள் இருந்து என்ன பயன். அதை அமுல்படுத்தும் அதிகாரிகளிடம் மனிதநேயம்
இல்லாவிட்டால். காலம்தான் இவர்களுக்கு பதில்
சொல்லவேண்டும்
கையெழுத்து போட இரண்டு கைகளும் இல்லாதவர்கள் கூட வங்கிகளில்
கணக்கு திறந்து பணம் போட்டு தன் கால் விரல் ரேகை பதித்து பணம் எடுக்கலாம் என்று
அரசாணைகள் இருந்தும், அத்தகைய யாரேனும் ஒருவரை எந்த வங்கியிலாவது நீங்கள் கண்டதுண்டா ? ஏனென்றால் நம்மில் பலருக்கு மனிதநேயம் என்பதே
இல்லாமல் போய்விட்டது. அதனால் தான்
இவர்கள் வங்கி பக்கமே வருவதில்லை. நடப்பது
நடக்கட்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் தனது உரிமைகளை கட்டாயம்
தெரிந்துகொள்வது அவசியம். அவரின்
உறவினர்கள் ஒத்தாசை இருக்கவேண்டும்.
(1) இரண்டு கைகளும் இல்லாத பென்சனர் வங்கியில்
பென்சன் கணக்கு திறந்து தனது கால் விரல் ரேகை பதித்து பணம் எடுக்கலாம். இதற்க்கு யார் சிபாரிசும் தேவையில்லை. ஆனால்
நல்ல உள்ளங்களின் உதவி தேவை.
(2) வங்கிகளுக்கு நேரடியாக செல்லமுடியாத
முதியோர்கள், நோய் வாய் பட்டோர் பணம் எடுக்கும் படிவத்தில் கையோப்போமோ, கைரேகையோ
அல்லது கால் விரல் ரேகையோ பதித்து இரண்டு சாட்சிகளிடம் கையொப்பம்
வாங்கவேண்டும். ஒரு சாட்சி ஒரு வங்கி
அதிகாரியாக இருக்கவேண்டும்.
இதுபோன்று பணம் எடுக்கும்போது பணத்தை யாரிடம் கொடுக்க
வேண்டும் என்பதற்கு இரண்டு சாட்சிகளுடன் ஒருவரை நியமித்து அவர் வங்கிக்கு சென்று
முன்னதாக முறைப்படி அவரது கையெழுத்தை இடவேண்டும்.
இந்த முறையை பென்சனர்களின் உறவினர்கள் தெரிந்துகொண்டு பொறுமையுடன்
செயல்பட்டால் எந்த சிரமும் இன்றி பென்ஷனை ஒவ்வொரு மாதமும் எடுக்கலாம். விவரம் தெரிந்தவர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில்
உதவ முன்வரவேண்டும்.
“பென்சனர்ஸ் அட்வகேட் “ என்ற பத்திரிகையில் (May 2012) வெளிவந்ததின் தமிழ் வடிவம். இதை படிப்பவர்கள், இதுபோன்று
கஷ்டபடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே எமது விருப்பம்.
“தெரிந்து கொள்ளுங்கள்” என்ற ஒரு பென்சனர்களுக்கான
வழிகாட்டி புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் இதுபோன்ற நல்ல பல செய்திகள் வர
உள்ளன. உங்கள் தேவைக்கு முன் பதிவு
செய்யவும். நன்றி.
No comments:
Post a Comment