இராணுவத்தில் சிப்பாய் ஆக சேர்ந்து, பணியில் உள்ளபோது தகுதி இருந்தும் பதவி உயர்வு தரப்படாத நிலையில் எட்டு வருடங்கள் கழித்து நாயக் (Naik) பதவிக்கு உள்ள ஊதியம் மட்டும் உயர்த்தி தரப்படும். அவர்கள் இதுபோல் மூன்று ஊதிய உயர்வுக்கு தகுதி பெறுகிறார்கள். (ACP I, ACP II, & ACP III).
இவர்கள் பணியில் இருந்து விலகி வரும்போது பென்சனும் உயர்த்தி தரப்படுகிறது. உதாரணமாக Naik ACP I என்று PPO வில் பென்சன் ரேங்க் குறிப்பிட பட்டிருந்தால், அவருக்கு ஹவில்தார் (Havildar) பென்சன் வழங்க படும். இதை சம்பந்தப்பட்டவர்கள் அறிய வேண்டும். வங்கியும் அறிய வேண்டும்.
CDA circular No.430 வின் படி பென்சன் 1.7.2009 முதல் திருத்தி அமைக்கப்படும் பொது மேல் குறிப்பிட்டுள்ள செய்தி அறிய படாமல் சிலரது பென்சன் குறைவாக திருத்தி அமைக்க படுகிறது. பென்சனர்கள் விழிப்புடன் இருந்து சரியான பென்சன் பெறவேண்டும் என்பது எமது விருப்பம்.
1 comment:
Sir,
I am ex sgt. kindly tell me about acp I II III of post 2006.
Post a Comment