தெரிந்து கொள்ளுங்கள் புத்தகத்திலிருந்து சில துளிகள்
இயலாமை பென்சனும் விசேஷ குடும்ப பென்சனும்
(Grant of Special Family pension after the death of Disability pensioner)
(PCDA Circular No.440 dt.26.8.2010)
ஒரு படை வீரர் பணியின் நிமித்தம் இயலாமை அடையும்போது ,
மருத்துவ குழுவின் சிபாரிசின் அடிப்படையில் அவருக்கு இயலாமை பென்சன் வழங்கபடுகிறது.
ஆனால் துரதிரிஷ்ட வசமாக இரண்டு அல்லது ஏழு ஆண்டுகளில்
இறந்துவிட்டால் அவர் மனைவிக்கு விசேஷ குடும்ப பென்சன்
வழங்கவேண்டும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
இதோ இந்த புத்தகத்தில் எளிய தமிழில் நல்லதோர்
விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும்.
இதோ இந்த புத்தககத்தில் இடம்பெற்றுள்ள சில
சில சிந்தனையை தூண்டும் கேள்வி பதில்கள்.
1 திடீரென்று காணாமல் போன ஒரு ராணுவ பென்சனர் மனைவி
பென்சனுக்கு என்ன செய்ய வேண்டும் ?
2 தகுதியின்மை பென்சன் (Invalid Pension) இயலாமை பென்சன்
(Disability pension) இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?
3 ஒரு படை வீரர் இளம் வயதில் பணியில் இருக்கும்போது இறந்து
விடுகிறார். அவர் மனைவிக்கு மட்டுமே விசேஷ பென்சன்
வழங்கபடுகிறது. அந்த படைவீரரின் விதவை தாய்
கவனிப்பாரின்றி கைவிடபடுகிறார். மனைவிக்கு கொடுக்கப்படும்
பென்சனில் இந்த தாய்க்கும் பங்கு கிடைக்குமா ?
4 விசேஷ குடும்ப பென்சன் பெரும் ஒரு விதவை மறுமணம்
செய்து கொண்டால், பென்சன் நிறுத்தப்படுமா ?
5 இரண்டு குடும்ப பென்சன் பெற என்னதான் செய்வது ?
இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு விடை காணும் புத்தகம்
"தெரிந்து கொள்ளுங்கள்" என்ற இந்த ராணுவ பென்சன் வழிகாட்டி.
ஒரு பயனுள்ள புத்தகத்தை படிக்க தவறாதீர்கள்.
புத்தகம் கிடைக்குமிடம்
எக்ஸ்வெல் அறக்கட்டளை
15 G மிலிடரி லைன், சமாதானபுரம்
பாளையம்கோட்டை, திருநெல்வேலி 627002.
தொலைபேசி: 0462-2575380, 9894152959.
10 புத்தகத்தின் விலை Rs.300 (கொரியர் செலவு உட்பட)
"எக்ஸ்வெல் டிரஸ்ட்" என்ற பெயருக்கு டிராப்ட் அனுப்பலாம்.
No comments:
Post a Comment