Tuesday, March 31, 2009

தீவிரவாதம் வளர யார் காரணம் ?

பென்ஷன் உங்கள் நண்பன் என்ற புத்தகத்தில் இருந்து
சில துளிகள் ! புத்தகம் வெளி வந்து ஐந்துஆண்டுகள்
ஆகி விட்டது. அன்று கூறியது இன்றும் ...........


இந்தியன்
ஏர் லயன்ஸ் விமானம் ஒன்று
1999
இம் ஆண்டு டிசம்பர் மாதம் காத்மாண்டுவிலிருந்து
டெல்லி செல்லும் வழியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு
கண்டகர் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பயணிகள் அனைவரும் பல நாட்கள் பிணை கைதிகளாக
விமானத்தின் உள்ளேயே சித்ரவதை செய்யப்பட்டனர்.
தீவிரவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு
ஒரு பயணி கொல்லப்பட்டார்.

பயணிகளின் பாதுகாப்புக்கு என்ன செய்தது இந்த அரசு
என இந்திய வெளி உறவு துறை அமைச்சரின் வீட்டின்
முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
தனது உறவினர்கள் அனைவரும் பத்திரமாக
வீடு திரும்ப வேண்டும் . அதற்கு அரசு உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது
உறவினர்களின் கோரிக்கை.
தீவிரவாதிகளின் கோரிக்கையோ தனது
தலைவனை (மொஹமது அசார்) இந்தியாவிலுள்ள சிறையிலிருந்து விடுவித்து அவர்களிடம் ஒப்படைப்பது.
முடிவில் நடந்தது என்ன ?
தீவிரவாதிகளின் கோரிக்கை நிறைவேறியது !
இந்திய வெளி உறவு துறை அமைச்சர்
நேரடியாக தலையிட்டு தீவிரவாதிகளின் தலைவனை
விடுதலை செய்து தீவிரவாதிகளிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன ?
நாட்டு பற்று இல்லாத மக்களை கொண்ட நாட்டில்
தீவிரவாதம் வெற்றி பெரும். பாதுகாப்பு துறையில் உள்ளோர்
தன் உயிரை பிணையம் வைத்து பிடித்த
அந்த தீவிரவாதிகளின் தலைவனை
எந்த விசாரணையும் இல்லாமல் விடுவித்தது இந்த அரசு.
எனவே தீவிரவாதம் வளர நாட்டு பற்று இல்லாத மக்களும்,
நேர்மையற்ற அரசியல்வாதிகளும் தான் காரணம் என்று புலனாகிறதல்லவா ?
(அந்த முன்னாள் அமைச்சர்
தான் செய்ததுதான் சரி என்றும், மீண்டும்
ஒருமுறை இதுபோல் நடந்தால் அதை
திருப்பி செய்ய தயங்க மாட்டேன் என்றும் கூறயுள்ளார்
என்பது இப்போதைய செய்தி.)
என்ன தலைவர்கள் ?
என்னே இவர்களின் நாட்டுப்பற்று !


முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பாகிஸ்தானில் அடைபட்டுள்ள பல நுற்றுகணக்கான போர் கைதிகளை இந்தியா அரசால் மீட்க முடிய வில்லை. நாட்டுக்காக போரிட்ட, உயிர் நீத்த வீரர்களின் நிலையை நாம் எண்ணி பார்க்க வேண்டும்.

ஓன்று மட்டும் நிச்சயம் !

நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைக்காத நாடு
இனி யாரும் அதற்காக உயிர்விடும் தகுதியை இழந்து விடும்

என்பதும் நிச்சயம்.

No comments:

Post a Comment