பென்ஷன் உங்கள் நண்பன் என்ற புத்தத்தில் இருந்து சில துளிகள்
போர் கைதிகள்
இந்தியா, பாகிஸ்தான் உறவுகள் மேம்பட நமது பிரதமர்கள் திரு வாஜ்பாய் , திரு மன்மோகன்சிங் இவர்களின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. எனினும் போர் கைதிகள் நிலைமை மிகவும் கவலைகிடமாக இருக்கிறது.
நாற்பது ஆண்டு காலமாக நூற்று கணக்கான ராணுவ வீரர்கள் போர் கைதிகளாக பிடிபட்டு பாகிஸ்தான் சிறைகளில் துயரம் அடைந்து வருதின்றனர். இவர்களின் குடும்பத்தினர் படும் துன்பங்கள் எந்த செய்தி தாள்களிலும் வருவதில்லை. மனித உரிமைகள் அணையதிடமும் செஞ்சிலுவை சங்கத்திடமும் எத்தனையோ விண்ணப்பங்கள் கொடுத்ததும் பலன் இல்லை.
ஆயுள் தண்டனை கைதிகள் கூட பதினைந்து ஆண்டுகளில் விடுதலை ஆகி விடுகிறார்கள். ஆனால் இந்த போர் கைதிகள் நிலைமையை எண்ணி பார்த்தீர்களா ? இதற்கு தீர்வு தான் என்ன ?
இன்னும் வரும் ....
No comments:
Post a Comment