Monday, November 1, 2010

இரண்டு குடும்ப பென்ஷன் ஏன் கிடையாது ?


குடும்ப பென்சனர்களுக்காக அல்லும் பகலும் பாடுபடும் எமது உயிர் நண்பர் 
திரு கந்தையா அவர்களுடன் ஒரு விதவை தாய்
 
தகுதி உள்ளவர்களுக்கு இரண்டு குடும்ப பென்சன் உடனே வழங்க வேண்டும்.

நமது பாதுகாப்பு படையை இளமையாய் வைத்திருக்கும் பொருட்டு ஆண்டுதோறும் சுமார் அறுபதாயிரம் படைவீரர்கள் குறைந்த பென்சனுடன் வீட்டுக்கு அனுப்ப படுகிறார்கள். 

இவர்களுக்கு அரசு எந்த வேலை வாய்ப்பும் கொடுப்பதில்லை.  இவர்களில் 95 சதவிதம் பேர் ஆபிசர் அல்லாத சாதாரண படை வீரர்கள் என்பது முக்கியம்.

இவர்களில் ஒருசிலர் தனது தனிப்பட்ட திறமையினால் மறுபணியில்சேர்ந்து அதிலிருந்து ஒய்வு பெற்றபின் மறுபடியும் ஒரு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கபடுகிறது.  அனால் அவர் இறந்த பின் அவருடைய மனைவிக்கு ஏதேனும் ஒரு குடும்ப பென்சன் மட்டும்தான் வழங்க படுகிறது.

ஒரு முன்னாள் படை வீரர் மறு பணியில் இருக்கும்போது துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால் அவருடைய மனைவிக்கு மறு பணி வழங்கிய நிர்வாகம் உடனே குடும்ப பென்சன் வழங்கி விடுகிறது.  அனால் அந்த படை வீரருக்கு ராணுவ பென்சன் வழங்கிவந்த ராணுவ அமைச்சகம், அவர் இறந்தபின், அவருக்கு மறு பணி கொடுத்த நிர்வாகம் அவர் மனைவிக்கு குடும்ப பென்சன் வழங்குவதால், ஏதேனும் ஒரு குடும்ப பென்சன் மட்டுமே பெற முடியும் என்று கூறி, முதல் உரிமையுடைய ராணுவ குடும்ப பென்சனை மறுத்து விடுகிறது.

ராணுவ அமைச்சகம் புரிந்துவரும் கொடுமைககளை இந்த நாட்டின் உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்புகளில் பலமுறை சுட்டிகாட்டியும், தொடர்ந்து இந்த கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 

இரண்டு குடும்ப பென்சன் வழங்கலாம் என உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதி மன்றமும், ராணுவ தீர்பாயமும் தீர்ப்பு வழங்கிய பின்பும் அரசு மௌனமாய் இருப்பது பெரும் வேதனைக்குரிய விஷயம். 

தகுதியுள்ள அனைத்து விதைவைகளும் நீதிமன்றம் சென்றுதான் இரண்டு பென்சன் பெற வேண்டும் என்று அரசு நினைக்கிறதா ?

அநீதி என்று தெரிந்தும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல.  நீதி, நேர்மைக்கு பெருமை சேர்ப்பது நல்ல நிர்வாகத்தின் கடமை.  அனைத்தையும் நீதிமன்றங்களே சுட்டி காட்டவேண்டும் என்று காத்திருப்பது நல்ல அரசுக்கு அழகல்ல.

பணிபுரியும் விதவைகளுக்கு பென்சனில் பஞ்சப்படி கிடையாது என்றது நிர்வாகம்.  நீதிமன்றங்கள் மூலம் பின்னர் பெற்றனர் இந்த விதவைகள்.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கும் குறைந்த பென்சனைகூட இரண்டாவது பென்சன் என கணக்கிட்டு இரண்டு பென்சன் பெற முடியாது என்றது அரசு.  இதையும் பின்னர் நீதி மன்றங்கள்தான் வழங்கியது இந்த விதவைகளுக்கு.  அதேபோல் இரண்டு குடும்ப பென்சன் கிடையாது என்கிறது அரசாணை.  இது தவறு. இரண்டு பென்சன் வழங்கவேண்டும் என்கிறது நீதிமன்றங்களும் ராணுவ தீர்பாயங்களும்.

பல நீதிமன்றங்களில் இரண்டு குடும்ப பென்சன் வழங்கலாம் என தீர்ப்புகள் வழங்கப்பட்டும் இதை அனைவருக்கும் அமுல்படுத்தாமல் அமைதியாக இருக்கிறது அரசு.  அத்தனை விதவைகளும் நீதிமன்றங்களை நோக்கி படையெடுக்க வேண்டும் என்கிறது இந்த அரசின் ராணுவ அமைச்சகம்.  இது ஒரு மாபெரும் துரதிர்ஷ்டம்.

எனவே இதை படிக்கும் பதிக்கபட்டர்வர்கள் அல்லது அவர்களுடைய உறவினர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு நீதி மன்றம் செல்ல தயார் ஆகலாம்.

முன்னாள் இராணுவத்தினர் மற்றும் சமுதாய நல அற கட்டளை,
எண் 15 மிலிடரி லைன், சமாதானபுரம்
பாளையம்கோட்டை, திருநெல்வேலி - 627002 
தொலைபேசி  0462 - 2575380 
மின் அஞ்சல் :  exweltrust2006@yahoo.com


No comments:

Post a Comment