புரியாத புதிராக விளங்கும் ராணுவ இயலாமை பென்ஷன்
திருப்பு முனையான நீதி மன்ற தீர்ப்பு.
புத்திசாலிகளைவிட நல்ல உடல் கட்டு உள்ள முரடர்களையே ராணுவம் அதிகம் விரும்புகிறது. ஒரு ராணுவ வீரனுக்கு தன் சொந்த புத்தியைவிட சொல் புத்திதான்அதிகம் தேவை. கீழ் படிதல், சொல்வதை செய்தல் இவை தேவையான முக்கிய குணமாக கருதப்படும்.
இந்த நிலையில் நல்ல ஆரோக்கியமான உடல் கட்டுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் ராணுவ பணியில் ஈடுபடும்போது பலதரப்பட்ட விபத்துக்குள்ளாகி ஊனமுற்றவர்களாக வீட்டுக்கு திருப்பி அனுப்பபடுகின்றனர்.
இவர்களின் ஊனம் ராணுவ பணி நிமித்தம் ஏற்பட்டதல்ல, இவர்களுக்கு எந்த இயலாமை பென்சனும் வழங்க முடியாது என ராணுவ அமைச்சகம் பல ஆயிர கணக்கான இளைஞர்களை ஒவ்வொரு ஆண்டும் வீட்டுக்கு அனுப்பி வருவது தொடர்ந்து நடந்து வரும் அநீதி. நீதி கேட்க நாதியின்றி , சக்தியின்றி வெறும் நடைபிணங்களாக காலம் கழித்து வருகின்றனர் பல ஆயிரக்கண முப்படை வீரர்கள்.
இந்நிலையில் சமீபத்தில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ராணுவ நீதி மன்றத்தின் தீர்ப்பு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது.
ராணுவ பணி நிமித்தம் ஒரு விபத்தில் சிக்கிய ஹவில்தார் .மோகர் சிங்க் பணி புரிய முடியாத நிலையில் எண்பது சதவீத இயலாமை பென்சனுடன் வீட்டுக்கு அனுப்ப பட்டார். அனால் நடந்தது என்ன ? ராணுவ பென்சனை அனுமதிக்கும் சி.டி.எ. அலஹபாத், இந்த மருத்துவ நிபுணர்களின் சிபாரிசை நிராகரித்து இயலாமை பென்சன் வழங்கவில்லை.
கொதித்தெழுந்த ஹவில்தார் மோகர் சிங்க் மேல் முறையீடு செய்து, ஒரு சக்கர நாற்காலியில் , மூன்று பேர் அடங்கிய ஒரு மருத்துவ குழு முன் ஆஜர் அனார். என்ன கொடுமை ? சக்கர நாற்காலியில் சென்ற ஒரு ராணுவ வீரனுக்கு இயலாமை பென்சன் வழங்கவில்லை அந்த மருத்தவ குழு. அதே வீரர் பின்னர் ராணுவ நீதி மன்றத்தில் முறையிடும் போதுதான் கிடைத்தது நீதி. நூறு சதவீதம் இயலாமை பென்சன் அனுமதித்த ராணுவ நீதி மன்றம், அந்த மூன்று பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பு இயலாமை பென்சன் வாங்குபவர்களுக்கு ஒரு இனிய செய்தி. இனியாவது நமது ஊனமுற்ற வீரர்களுக்கு ராணுவ அமைச்சகம் நியாயமான இயலாமை பென்சன் வழங்குமா என்று பார்போம்.
No comments:
Post a Comment