Thursday, June 10, 2010

EXWEL TRUST MEETS THE ELDERS

 
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் சமுதாய நல அறக்கட்டளை
(எக்ஸ்வெல் டிரஸ்ட் )
(EXWEL TRUST)
பதிவு எண்:757/2006
15 மிலிடரி லைன், சமாதானபுரம், பாளையம்கோட்டை,
திருநெல்வேலி 627002.
தொலைபேசி: 0462-2575380.

முதியோர் குறை தீர்க்கும் கூட்டம்
ELDERS MEET

வயது முதிர்ந்த முன்னாள்ராணுவபென்சனர்கள்மற்றும்குடும்பபென்சனர்களின் பலதரப்பட்டகுறைகளைகேட்டறிந்துஉரியநிவாரணம்வழங்கிட நமது அறக்கட்டளைஒருகூட்டத்துக்குஏற்பாடுசெய்துள்ளது.

கூட்டம் நடைபெறும் இடம் : ஹோட்டல் ஜானகி ராம் "அயோத்யா ஹால்
திருநெல்வேலி சந்திப்பு
நாள் :19.06.2010
நேரம் :10.00 AM

வயது முதிர்ந்த முன்னாள் ராணுவ பென்சனர்களையும் , குடும்ப பென்சனர்களையும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம். வர முடியாதவர்கள் தங்கள் உறவினர்களை அனுப்பி வைக்கலாம்.

அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

பின் குறிப்பு

கடந்த சில மாதங்களாக எக்ஸ்வெல் அறக்கட்டளை சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வயது முதிர்ந்த பென்சனர்களை அவர்களின் இல்லங்களில் சந்தித்து , பலதரப்பட்ட குறைகளை கேட்டறிந்து பல உதவிகளை செய்துள்ளது.
பெரும்பாலான பென்சனர்கள் குறைவான பென்சன் பெற்று வருகிறார்கள் என்பதை நாங்கள் காணும்போது மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். தவிர எண்பது வயதிற்கு மேல் ஆனவர்களுக்கு அடிசனல் பென்சன், மருத்துவ திட்டம், குடும்ப ஒய்வுதியத்தை பதிவு செய்தல் போன்ற தகவல் எதுவும் தெரியாமல் , ஏதோ வங்கிகள் கொடுக்கும் பென்சனை (அது சரியா இல்லையா என்று கூட தெரியாமல் ) எடுத்து செலவு செய்து வருகின்றனர்.
எக்ஸ்வெல் அறக்கட்டளை ஊழியர்கள் , அவர்களிடம் முழு விபரத்தையும் எடுத்துகூறி சுமார் இருபதிற்கும் மேற்பட்டவர்களுக்கு அடிசனல் பென்சன் , மற்றும் சரியான பென்சனும் அறியர்சும் பெற்று தந்துள்ளது.

இந்த அறக்கட்டளையின் சேவைகளை அனைவரும், குறிப்பாக முதியோர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும், மற்றும் வயதான ராணுவ பென்சனர்களின் தேவைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்கு சிறந்த சேவை செய்யும் பொருட்டும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இவண்
நிர்வாக அறங்காவலர்
எக்ஸ்வெல் அறக்கட்டளை





1 comment:

  1. Col A K Sarkar(Retd)June 10, 2010 at 11:32 AM

    Dear Exwel Trust Members, Y You are doing excellent job for veterns and their widows .Please put your activities on the blog in english for information of veterns like me and others from all over India .

    ReplyDelete