
நமக்கென்று ஒரு தலைவன் தேவை.
சேவை செய்பவர்களை பாராட்டுவது நமது கடமை.
எந்த கைமாறும் இல்லாமல் செய்வதுதான் சேவை.
எந்த பாராட்டுக்களையும் எதிர்பாராமல் செய்வதுதான் சேவை. எனினும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒருவர் மனதில் மென் மேலும் பெருக அதற்கு பாராட்டுதல்கள் அவசியம்.
ஒருவரை பாராட்ட பணமோ, பொருளோ தேவை இல்லை.
நல்ல மனமும், செய்நன்றி மறவாமையும், செய்தவர்களை மறக்காமல் இருத்தலும் அவசியம்.
துரதிர்ஷ்டவசமாக நமது பல முன்னாள் இராணுவத்தினர் நல சங்கங்களில் இந்த சாதாரண பாராட்டுக்களை கூட நமது நண்பர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள தயங்குகிறார்கள்.
இதன் விளைவால் நமது சமுதாயம் சேவை உள்ளம் கொண்ட நல்ல பல மனிதர்களை இழக்கிறது. இந்த போக்கு நம் இன முன்னேற்றத்திற்கு நல்லதல்ல.
எந்த ஒரு வீடோ, சமுதாயமோ அல்லது நாடோ சிறந்து விளங்க நல்ல தலைவர்கள் வேண்டும். நல்ல தலைவர்களை நாம்தான் கண்டெடுக்க வேண்டும்.
அகில இந்திய அளவில் சுமார் பதினேழு லட்சம் முன்னாள் இராணுவத்தினர்களை கொண்ட நம் சமுதாயத்துக்கு ஒரு நல்ல தலைவனை உருவாக்கி இருக்கிறோமா ?
நாம் நமக்கென்று ஒரு தலைவனை உருவாக்க வேண்டாமா ? நம் இனத்தவர்களில் பலர் அங்கும் இங்கும் பிரிந்து பல அறிய சேவைகளை செய்து வருகிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் நம் எல்லோருக்கும் நல்ல ஒரு தலைவன் தேவை. அவரை நாம் கண்டெடுக்கும் நாள்தான் நம் கோரிக்கைகள் நிறைவேறும் நாள்.
உங்களுக்கு தெரிந்தவர்களை புகைப்படத்துடன் எங்களுக்கு தெரிவிக்கவும். நம் வலை தளத்தில் அவர்களை அறிமுகப்படுத்துவோம்.
நன்றி. வணக்கம்.
No comments:
Post a Comment