Thursday, January 14, 2010

ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் எப்படி கிடைக்கும் ?





ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் கிடைக்க வில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறதா உங்களுக்கு ?

ஆம்! எப்படி கிடைக்கும் உங்களுக்கு ?

நீங்கள் என்ன இதற்காக எந்த சங்கத்திலாவது சேர்ந்து ஒரு நாளாவது கோஷமிட்டதுண்டா ?

என்றாவது ஒரு நாள் இதற்காக உண்ணா விரதம் இருந்ததுண்டா ? உங்கள் கோரிக்கைகளை யாரிடமாவது கூறியதுண்டா ?

எந்த மாதமாவது கான்டீன் கோட்டாவை வாங்காமல் இருந்ததுண்டா ?

எதற்காக, எனக்கும், என் மரணத்துக்குப்பின், என் மனைவிக்கும் இந்த அரசு மது பானம் வழங்குகிறது என்று சிந்தித்ததுண்டா ?

நாம் தான் எதை பற்றியும் சிந்திப்பதில்லையே பின்னர் எப்படி நமக்கு ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் கிடைக்கும் ?

நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரே சிந்தனையுடன் போராடும் நாளில்தான் நமக்கு கிடைக்கும்

ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்.

எனவே சிந்தியுங்கள் தோழர்களே ! சிந்தியுங்கள் !

முதலில் உங்களுக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கிறது என்பதையும் உங்கள் மனைவிக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment