Thursday, April 16, 2009

ராணுவ கோர்ட் தண்டனையை ரத்து செய்தது உயர் நீதி மன்றம்


ராணுவ கோர்ட் ஒரு நாயக்கிற்கு விதித்த
ஆயுள்
தண்டனையை சென்னை உயர்தி மன்றம் ரத்து செய்தது
(தின தந்தி நெல்லை பதிப்பு நாள் 16.4.2009)
நாயக்
ஸ்ரீராமன் 27.10.84 இல் ராணுவத்தில் சேர்ந்தார்.
பதினாறு ஆண்டுகள் ராணுவ பணியில் பத்து ஆண்டுகளில்
இலங்கை, அஸ்ஸாம், மணிப்பூர், கார்கில்,
ஆகிய
இடங்களில் நடந்த போரில் கலந்து கொண்டுள்ளார்.
உயர் ராணுவ அதிகாரி சுபேதார் நலினக்சனை 27.7.99 இல்
.கே 47 துப்பாக்கி மூலம் சுட்டு கொன்றதாக
ஸ்ரீராமன்
மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ராணுவ கோர்ட் இந்த வழக்கை விசாரித்து
ஸ்ரீராமனுக்கு
ஆயுள் தண்டனை வழங்கியது.
இவரது
பதவியையும் குறைத்து பணி நீக்கமும் செய்தது.
நவம்பர் 2000 இல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு
ஸ்ரீராமன் வேலூர் ஜெயிலில் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த
தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில்
மனு
தாக்கல் செய்தார் ஸ்ரீராமன். பதினாறு ஆண்டுகள்
ராணுவ
பணியில் பல இடங்களில் பணி புரிந்ததாகவும் ,
உயர் அதிகாரி நலினக்சனை தான் கொல்ல வில்லை எனவும் பயங்கர வாதிகளுடன் நடந்த மோதலில் தான்
அவர்
சுட்டு கொல்லப்பட்டார் என்றும், தன்னை துன்புறுத்தி ராணுவ அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினார்கள் என்றும்,
ராணுவ
சிறையில் தன்னை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதாகவும் மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த
நீதிபதி
கே.சந்துரு அவர்கள் ஸ்ரீராமனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில்
, மனுதாரரை இராணுவம் சிறையில் துன்புருத்திய தாகவும் , அவருடைய ஒப்புதல் வாக்கு மூலத்தில் மர்மம் இருப்பதாகவும்,
இந்தி
வாசகங்களை ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்து வாங்கி இருப்பதாகவும் வாக்கு மூலத்தில் தேதி இல்லாமலும்,
முதல்
தகவல் அறிக்கை தாமதமாக பதிவு செய்ய பட்டதாகவும், சுடப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி மற்றும் குண்டுகள் கோர்ட்டில் சமர்பிக்க படவில்லை என்பதாலும்,
மேலும்
ராணுவ நீதி மன்றம் இந்த வழக்கை முறையற்ற முறையில் விசாரித்து தீர்ப்பு வழங்கியதால் ஆயுள் தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்குவதாக கூறி உள்ளது.
பதவி
இறக்கம் , பணி நீக்கம் பற்றி
உயர்
நீதி மன்றம் கருத்து தெரிவிக்க வில்லை.
16
ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி பத்து ஆண்டுகள் நீதிக்காக போராடி விடுதலை பெற்றுள்ளார் ஒரு ராணுவ வீரர்.

No comments:

Post a Comment