Saturday, April 4, 2009

ஓய்வுபெறும் ராணுவத்தினர்க்கு இன்சூரன்ஸ் திட்டம்

ஓய்வு பெரும் இராணுவத்தினருக்கான குரூப் இன்சூரன்ஸ் திட்டம்


1.1.81 முதல் இராணுவத்தினருக்கும் 1.8.81 முதல் விமா படை வீரர்களுக்கும் இந்த குரூப் இன்சூரன்ஸ் திட்டம் அறிமுதபடுதப்பட்டது. ஓய்வு பெரும் போது ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (10, 15, 20 ஆண்டுகள் ) கட்டனமாக் பெற்றுக்கொண்டு அந்த குறிப்பிட்ட காலம் அல்லது 65/70 வயது இதில் எது முன்னதாக முடிவடைகிறதோ அந்த நாள் வரை இன்சூரன்ஸ் தொகை ரூ.65000/- திலிரிந்து ரூ.300000/- வரையும் ரூ.30000/- லிரிந்து ரூ.150000/- வரையும் அவரவர் இத்திட்டத்தில் சேர்ந்த தேதிகளின் அடிப்படையில் உறுப்பினர் மரணத்துக்குப்பின் இந்த தொகை அவருடைய மனைவிக்கோ அல்லது நியமிக்கப்பட்ட உறவினர்களுக்கோ வழங்கப்படுகிறது.

இது ஒரு சிறந்த திட்டம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த திட்டத்தில் 1981 முதல் 1999 வரை படிப்படியாக பல முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளதும் குறிப்பிட தக்கது. எனினும் இதிலுள்ள உறுப்பினர் அனைவருக்கும் ஒரே சீரான பலன், பாதுகாப்பு வழங்க வேண்டுமென்பது எமது பணிவான வேண்டுகோள். இந்த வேண்டுகோளை செயல்படுத்த கூடுதல் கட்டணம் தேவைப்படுமானால் அதையும் நிர்ணயித்து ஓய்வு பெற்று வந்தவர்களிடம் வசூலித்து கொள்ளலாம்.

வறுமையில் வாடிய என் நண்பர் ஒருவர், தான் இத்திட்டத்தில் இருப்பதையும் , தன் மரணத்துக்குப்பின் ரூ.40000/- கிடைக்கும் எனவும் தன் மனைவி, மக்களிடம் சொல்லி அந்த இன்சூரன்ஸ் பத்திரத்தை என் கையில் கொடுத்து, பத்து நாள் மருத்துவ மனையில் இருந்து பின்னர் இறந்து விட்டார். அவர் நோய் வாய் பட்டதால் இந்த 15 ஆண்டு தகுதி மருத்துவ மனையில் இருந்த ஓரிரு நாட்களில் முடிந்து விட்டது என்பது அவருக்கு தெரியாது. அதை நாங்கள் சொல்லவும் இல்லை. மரணம் என்பது ஒவொருவருக்கும் நிச்சயம் உண்டு என்பதை எல்லோரும் நினைவில் கொண்டு தான் வாழ்கின்றனர். இந்த நாள் ஒரு நாள் பின்னதாக வந்து இவ்வளவு பண இழப்பை ஏற்படுத்தும் போது நமக்கு ஏற்பட்ட வேதனையை என்னென்று சொல்வது ?

திட்டங்களை வகுக்கும் வல்லுனர்கள் இது போன்ற பாதிப்புகளை எதிர் நோக்கி அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வகை செய்ய வேண்டும். இந்திய இராணுவம் நிர்வாக திறமைக்கு புகழ் பெற்றது. அவர்கள் நினைத்தால் முடியாதது இல்லை. எனவே இந்த குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தை முழுமையாக மறு பரிசீலனை செய்து ஓய்வு பெரும் அனைவருக்கும் ஒரே சீராக குறைந்த பட்சம் ஒரு தொகையை இந்த குரூப் இன்சூரன்ஸ் சார்பாக இவர்கள் இறந்தபின் இவர் மனைவிக்கு வழங்க வேண்டும் என்று பல லட்ச கணக்கான வயதான ராணுவ பென்சனர் சார்பாக விடுக்கப்படும் வேண்டுகோள்.

இதை படிப்பவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ராணுவ அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். செய்வீர்களா ?

1 comment:

  1. Dear Sir,

    I think it is a genuine demand. The Group Insurance Societies are independent. The contribution made by a Soldier in the year 1981 is still with the Society. It is that amount which helped the Society to grow to this level. The service chiefs should consider the demand to pay some amount to the NOK on the death of the solder.

    ReplyDelete