ஒன் ரேங்க் ஒன் பென்சன் பற்றி
ஒரு நல்ல செய்தி.
என் அருமை முன்னாள்முப்படை வீரர்களே !
ராஜ்ய சபா பெட்டிசன் கமிட்டி ஒன் ரேங்க் ஒன் பென்சன் சம்பந்தமான தனது சிபாரிசுகளை 16.12.2011 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விட்டது. தற்போது நடந்துகொண்டிருக்கும் இந்த குளிர்கால கூட்ட தொடரில் இந்த சிபாரிசுகள் பரிசீலிக்கப்படும்.
IESM சங்கம் வடிவமைத்த அதே கோணத்தில்தான் இந்த கமிட்டியும் சிபாரிசு செய்துள்ளது என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது.
அது சரி ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்றால் என்ன ?
ஒரே ரேங்க், ஒரே சர்வீஸ் உள்ளவர்களுக்கு ஒரே சீரான பென்சன் வழங்கப்படவேண்டும். பணி விலகி வந்த தேதி எதுவாக இருந்தாலும் இப்போது பணி விலகி வருபவர்களுக்கு கொடுக்கப்படும் அதே பென்சன் வழங்கப்படவேண்டும். வரும் காலத்தில் பென்சன் அதிகரிக்கும்போது அனைவருக்கும் சமமாக வழங்கப்படவேண்டும் என்பது தான்.
இந்த கமிட்டியினுடைய பதினான்கு பக்க ரிப்போர்ட் நமது கோரிக்கை நியாயமானது எனகூறியுள்ளது. இந்த கமிட்டியின் சேர்மன் திரு.பகத் சிங் கோஷியாரி அவர்களுக்கு 25 லட்சம் முன்னாள் படைவீரர்களும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்த சிபாரிசுகளை அரசு முழுமையாக ஒப்புக்கொண்டு விரைவில் அமுல்படுத்தும் என்று நம்புவோமாக. இந்த OROPஇக்கு முழு உருவம் கொடுத்து பல போராட்டங்களை நடத்திய IESM சங்கத்தில் நாம் அனைவரும் உறுப்பினராகி அதன் கரங்களை பலபடுத்துவோம்.
செய்வீர்களா ?
கமிட்டி ரிப்போர்ட் முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இங்கே click செய்யவும்.
நன்றி
No comments:
Post a Comment