Thursday, June 23, 2011

ABOUT THE GUIDE BOOK ON DEFENCE PENSION IN TAMIL


"தெரிந்து கொள்ளுங்கள்" என்ற புத்தகத்திலிருந்து சில துளிகள் 

இயலாமை  பென்சனும், விசேஷ குடும்ப பென்சனும் (Disability Pension & Special Family Pension)
(Grant of Special Family Pension after the death of Disability Pensioner)(PCDA Circular 440 dt.26.8.2010)
ஒரு படைவீரர் பணியின் நிமித்தம் இயலாமை அடையும்போது, மருத்துவ குழுவின் சிபாரிசின் அடிப்படையில் அவருக்கு இயலாமை பென்சன் ((Disability Pension/Invalid Pension) வழங்கபடுகிறது. 

இவருடைய வாழ்நாளை நிர்ணயிப்பது இயலாமை தன்மையை பொறுத்து அமைகிறது.  சில உயிர் கொல்லி நோய்களினால் பாதிக்கப்பட்டு இயலாமை பென்சன் பெற்று வருபவர்கள் நீண்ட நாள் வாழ வாய்ப்பில்லை என்பது மருத்துவ உலகத்துக்கு நன்கு தெரியும்.  ஆனால் பாதிக்கப்பட்டவர்களும் அவருடைய குடும்பத்தினரும் இதுபற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கவேண்டும். 
காரணம், எந்த நோய் நொடியினால் பாதிக்கப்பட்டு இயலாமை பென்சனில் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதோ அதே நோயினால் அவர் பென்சனில் வந்த ஏழு ஆண்டுகளுக்குள்  இறக்க நேர்ந்தால் அவர் மனைவிக்கு விசேஷ குடும்ப பென்சன் (Special Family Pension) வாழ்நாள் முழுவதும் வழங்கப்படவேண்டும்.

விசேஷ குடும்ப பென்சன் என்பது சாதாரண குடும்ப பென்சனை விட இரண்டு மடங்கு அதிகம்.  தற்சமயம் குறைந்தபட்ச விசேஷ குடும்ப பென்சன் Rs.7000/- w.e.f. 01.01.2006.

ஒரு படைவீரன் பணியின் நிமித்தம் ஏற்பட்ட இயலாமைக்காக அவருக்கு இயலாமை பென்சன் வழங்குவதும்,  அந்த இயலாமையால் குறைந்த வயதில் அகால மரணமடைந்ததற்கான அவர் மனைவிக்கு விசேஷ குடும்ப பென்சன் கொடுப்பது நியாயமாகும். 
ஒரு இயலாமை பென்சன் பெறுபவர் பணி விலகிவந்த ஏழு ஆண்டுகளுக்குள்  இறந்துவிட்டால் அவர் மனைவிக்கு விசேஷ குடும்ப பென்சன் கிடைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.

1  முதலில் எந்த இயலாமைக்கு, அவருக்கு இயலாமை பென்சன் வழங்கபடுகிறதோ, அதே இயலாமை காரணமாகத்தான் அவர் இறந்தார் என்பதை மருத்துவ சான்றுடன் நிரூபிக்க வேண்டும்.
2  மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழில், நோயின் அறிகுறிகள், நோயின் தன்மை, சிகிச்சை அளித்த நாட்கள் , இறந்த தேதி முதலியவை குறிப்பிட பட வேண்டும்.
3 இறப்பிற்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் . (Cause of Death). 
4 பென்சன் விண்ணப்பம் அனுப்புபவர் இரண்டு சாட்சியங்களுடன் முழு விபரம் இணைக்கவேண்டும்.
5 தேவைபட்டால் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட், போலீஸ் விசாரணை தகவல் ஆகியவையும் இணைக்கவேண்டும். (Post Mortem Report and Copy of FIR)

இறந்த படைவீரருடைய ரெகார்ட் ஆபிசுக்கு அனுப்பப்படும் இந்த விண்ணப்பத்துடன் மற்ற மருத்துவ ஆவணங்களும் சேர்க்கப்பட்டு அந்த விதவைக்கு விசேஷ குடும்ப பென்சன் வழங்க சிபாரிசு செயப்படும்.

ஒருவேளை சரியான காரணம் இல்லாமல் நிரகரிக்கபட்டால் சம்பந்தப்பட்டர்வர்கள் மனம் தளராமல் நீதிக்காக போராடவேண்டும்.

(இன்னும் பல அறிய தகவல்களை கொண்டது இந்த புத்தகம்)  ஒவ்வொரு ராணுவ பென்சனரும் அவர் தம் கும்பத்தினரும் அவசியம் படிக்கவேண்டியது.

விலை  ரூபாய் முப்பது மட்டும். தபால் செலவு ருபாய் இருபது. மொத்தம்  Rs.50 M.O. அனுப்பவும்.
பத்து புத்தகம் ருபாய் 300 தபால் செலவு உட்பட. (BY COURIER)

முகவரி.:  Exservicemen and Social Welfare Trust (Exwel Trust)
                No.15 G. Military Lines. Samathanapuram,
                Palayamkottai, Tirunelveli 627002.  (Phone: 9894152959)

நமது பென்சனைபற்றி நாமும், நம் குடும்பத்தினரும் 
தெரிந்து கொள்வது அவசியம் இல்லையா !
KNOWLEDGE IS POWER

தெரியாது என்று சொல்வது ஒரு 
அவமானம். எனவே 
தெரிந்து கொள்வது அவசியம்

 




No comments:

Post a Comment