தகுதியுள்ள விதவைகளுக்கு உடனே இரண்டு குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும்.
ராணுவ தீர்பாயத்தின் சமீபத்திய தீர்ப்புகள் (The recent judgements of the Armed Forces Tribunal, Kochi)(The judgments linked in other similar posts) இந்த விதவைகளுக்கு உடனே இரண்டு குடும்ப பென்சன் வழங்க வேண்டும் என தெளிவாக கூறியுள்ளது.
ராணுவ அமைச்சகம் இதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து விதைவைகளுக்கும் இரண்டு பென்சன் வழங்க ஆணைகள் உடனே பிறப்பிக்க வேண்டும். அது தான் ஒரு நல்ல அரசுக்கும், அமைச்சுக்கும் அழகு. அதை விடுத்து இந்த நீதி மன்றத்தின் தீர்ப்பை கண்டும், காணமல் இருந்துகொண்டு, அனைவரையும் நீதிமன்றங்களுக்கு செல்ல வைப்பதும் பின்னர் அதை எதிர் கொள்ள முடியாமல் உச்ச நீதி மன்றத்துக்கு இந்த ஏழை விதவைகளை இழுத்தடித்து நிலைகெட செய்வது நல்லதல்ல.
"நல்ல நிர்வாகத்தால் வழங்கப்படும் நீதி தான் உயர்ந்தது. நீதி மன்றங்களினால் பெறப்படும் நீதிகள் நிர்வாகத்துக்கு பெரும் அவமானம் என்பதை நிர்வாகம் (Ministry of Defence) நன்கு உணர வேண்டும்."
சுமார் இருபது லட்சம் பென்சனர்களைகொண்ட மத்திய அரசின் தொழிலாளர் நல பென்சன் திட்டத்தின் (Employees Pension Scheme 1995) பென்சனை (குறைந்த குடும்ப பென்சன்) பெற்றுவரும் காரணத்தால் அந்த ராணுவ குடும்ப பென்சன் மறுக்கப்பட்டது. அந்த விதவையின் எத்தனையோ முறையீடுகளை ஈவு இரக்கமின்றி நிராகரித்தது இந்த ராணுவ அமைச்சகம். முடிவில் நடந்தது என்ன ? நீதி மன்றம் அந்த விதவைக்கு இரண்டு பென்சனையும் வழங்கலாம் என தீர்பளித்தது.
இதை கண்ட அந்த தொழிலாளர் நல அமைச்சகம் 'நாம் கொடுக்கும் இந்த குறைந்த பென்சனை பெறுவதில் கூட இந்த ஏழை விதவைக்கு இத்தனை சோதனைகளா என்று உணர்ந்து தனது அமைச்சகத்தின் மூலம் உடனே EPF பென்சன் வாங்கும் அணைத்து விதவைகளும் மற்ற எந்த பென்சனும் வாங்குவதில் தடை இல்லை என ஆணை பிறப்பித்தது.
இதன் மூலம் ராணுவ அமைச்சகத்துக்கு சரியான பாடம் புகட்டியது இந்த தொழிலாளர் நல அமைச்சகம். இந்த EPF பென்சன் ஆணை அனைவருக்கும் தெரியும். அனால் இந்த ஆணை வெளியிட்டதின் பின்னணி அனைவருக்கும் தெரியாது.
இப்பவும் இதேபோல் வங்கிகள் தன உழியர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கும் பென்சனில் வீணாக தலையிடுகிறது ராணுவ அமைச்சகம். (பாரத ஸ்டேட் வங்கியும் இரண்டு பென்சன் கொடுக்க முடியாது என கூறி வருகிறது ) (The state Bank of India is also rejecting its own family pension if the widow is drawing defence family pension) இந்த தீர்ப்பும், வேண்டுகோளும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் பொருந்தும் என்பதை ஸ்டேட் வங்கி நிர்வாகம் உணர வேண்டும்.
இந்த ராணுவ தீர்பாயத்தின் தீர்ப்புகள் தெளிவாக உள்ளது. ராணுவ குடும்ப பென்சனும் வங்கிகள் கொடுக்கும் குடும்ப பென்சனும் தனித் தனியானது. எனவே இரண்டு பென்சனையும் பெற உரிமை உண்டு எனும் ஆணையை ராணுவ அமைச்சகம் உடனே வெளியிட்டு பாதிக்கப்பட்ட அனைத்து விதவைகளுக்கும் நல்ல சமுதாய நீதி வழங்க வேண்டும்.
முன்னாள் படை வீரர் குடும்பங்களின் நலன் காப்பது ராணுவ அமைச்சகத்தின் தலையாய கடமையாகும்.
இது பாதிக்கப்பட்ட விதவைகளின் சார்பாக விடுக்கும் வேண்டுகோள்.
Thank you for the article in Tamil so that more number of veterans can read and spread the informations to others.We need such articles published very often through the blogs.
ReplyDeletekanthiah