என் அருமை நண்பர் ஒருவர் ராணுவ பென்சனை கணக்கிடுவதில் ஒரு நிபுணர். பல நூற்றுகணக்கான ராணுவ பென்சனர்களுக்கு பல லட்சங்கள் அரியர்ஸ் வாங்கி கொடுத்து கொண்டிருக்கிறார்.
நமது இனத்தின் காண கிடைக்காத ஒரு அற்புத மனிதர். அவரிடம் உதவி பெற்றோர் ஆயிரம் பேர் இருந்தும் அவருக்கென்று ஒரு கஷ்டம் வரும்போது உதவி செய்வார் யாருமில்லை.
சேவை செய் பவர்களை அடையாளம் காண்பதில்ல நம் மக்கள். எனவே சேவை செய்பவர்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. இது தொடர்ந்தால் நாம் யாருமில்லா அனாதை ஆகி விடுவோம். நாம் அடையாளம் காட்டாத காரணத்தால் சுய லாபம் தேடும் சில புல்லுரிவிகள் நம் இன மக்களை சுரண்டி கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு நடந்த ஒரு சங்கத்தின் ஆண்டுவிழாவில் நூற்றுகணக்கான முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் கூட அந்த கூட்டத்துக்கு வராத அந்த சங்கத்தின் முன்னாள் செயலாளரை, அவர் எங்கே ? ஏன் இந்த கூட்டத்துக்கு வரவில்லை என்று கேட்கவில்லை.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக சங்கத்துக்கு உழைத்த அந்த செயலாளரை ஒரு நிமிடத்தில் மறந்து விட்டனர் இந்த மக்கள்.
இந்த நிலை தொடர கூடாது. இது நம் இனத்தவருக்கு நல்லதல்ல.
நம் இனம் செழிக்க, நல்லதொரு தலைவன் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
@@@@@
No comments:
Post a Comment