நம் இனம் என்று விழித்தெழும் ?
ஜூன் 2006 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 1,15,942 முன்னாள் இராணுவத்தினரும் 47,667 விதவைகளும் வசிக்கின்றனர். தமிழ்நாடு முழுவதிலும் சுமார் 50 நல சங்கங்கள் உள்ளன. எந்த சங்கமும் முன்னாள் இராணுவத்தினரின் பொதுவான நலன் பற்றி போராடுவதில்லை. தனக்கென்று தமிழ்நாட்டில் ஒரு தலைவனை இதுநாள்வரை கண்டெடுக்கவில்லை. இதனால் தமிழக அரசும் கண்டுகொள்வதில்லை.
தனக்கு கிடைக்கவேண்டிய பென்சனைகூட சரிபார்க்க தெரியவில்லை. தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் தவறாமல் மதுபானம் மட்டும் வாங்கி செல்கின்றனர். அரசு இதையெல்லாம் நன்கு கவனித்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் இவர்களுக்கு ஒன் ரேங்க் ஒன் பென்சன் யார் கொடுப்பார்கள் ?
எதோ கொஞ்சம் சர்தார்ஜி படைவீரர்கள் மெடல்களை வீரத்துடன் வீசியதால், பென்சனில் ஓரளவு கூடுதல் கிடைத்தது. தமிழ் நாட்டிலிருந்து எத்தனைபேர் மெடல்களை திருப்பி கொடுத்தனர் என்று தெரியுமா ?
வெறும் முப்பது ரூபாய் விலையில் ஒரு அழகான பென்சன் வழிகாட்டி புத்தகத்தை வாங்கி படிக்க ஆர்வமில்லை எவருக்கும். இவர்கள் நலன் கருதி அச்சிட்ட புத்தகங்கள் தேங்கி கிடக்கிறது. சங்கங்கள் தன உறுப்பினர்களுக்கு நாட்டு நடப்பையும் , நம் நிலை பற்றியும் எடுத்துரைப்பதில்லை.
அரசும் இந்த முன்னாள் படை வீரர்களுக்கும், அவர்தம் விதவைகளுக்கும் மதுபானத்தை கொடுத்து நல்ல குடும்பத்தை கெடுக்கிறது.
"மதுபானம் எங்களுக்கு வேண்டாம் , நாடு காத்த எங்களுக்கு நல்லதோர் வேலை கொடு, நியாயமான பென்சன் கொடு " என்று நாம் குரல் கொடுக்கும் நாள் என்று வரும் ? நம் இனம் என்று விழித்தெழும் ? காலம்தான் பதில் சொல்லவேண்டும். இதற்கு கல்விதான் ஒரே வழி. தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் வேண்டும்.
எனவே "தெரிந்து கொள்ளுங்கள்" என்ற புத்தகத்தை உடனே வாங்கி படியுங்கள். விழித்தெழுங்கள், நியாத்துக்காக போராடுங்கள்.


Sir,
ReplyDeleteThe message is very nice for us. Every Veterans should read this and act accordingly, so that we can get the benefits from Govt.
With warm regards.
Thanks
KS Ramaswamy
Hony Capt (Retd)